ஸ்ரீ புற்று முருகன் சித்தர்பீடம்

ஓட்டப்பிடாரம், தூத்துக்குடி மாவட்டம்.

ஓம் சிவநாதா புற்று முருகா சர்ப்ப ராஜா போற்றி ஓம்!!! ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஆதி சக்தி மகா சக்தி சண்டி சக்தி ஓம்

ஸ்ரீ புற்று முருகன் சித்தர் பீடம்

தமிழகத்தில் உள்ள புண்ணியம் நிறைந்த சித்தர் பீடங்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓட்டப்பிடாரம் என்னும் ஊரிலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் சாலிகுளம் என்னும் இடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ புற்றுமுருகன் சித்தர் பீடமும் ஒன்றாகும். இந்த ஆலயம் புகழ்பெற்ற வீரபாண்டிய கட்டபொம்மனின் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை அருகிலேயே உள்ளது .

பல நூற்றாண்டுகளுக்கு முன் அடர்ந்த பயங்கர காடாக விளங்கியது தான் இந்த சாலிகுளம். இங்கே சித்தர்களும், ரிஷிகளும், சப்த கன்னியரும், இந்திரன் முதலான தேவர்களும் வந்து பூஜை செய்வதாக ஐதீகம். இங்கு பல ஆண்டுகளாக கடும் தவம் செய்த சிவகுருநாதர் என்னும் சித்தர் ஒருவரின் தவ வலிமையால் தோன்றியதே இந்த சித்தர் பீடம் ஆகும். இங்கு வரும் மக்கள் தங்கள் துன்பத்தை மறந்து நோயற்ற வாழ்வும் பலமிக்க வாழ்வும் பெற்று செல்கிறார்கள் என்பது கண்டறிந்த உண்மை.

சித்தர்பீட வரலாறு மற்றும் சிறப்புகள்

சித்தர் சிவகுருநாதரிடம் அருளாசி பெற்ற சிவ பக்தர் தங்கவேலுவின் பரம்பரையைச் சேர்ந்த முத்துச்சாமி என்னும் முருக பக்தர் தான் முதல் தலைமுறை. இவர் விஸ்வகர்மா இனத்தை சேர்ந்தவர். சித்தருக்கு முருகன் கொடுத்த ஏட்டையும், பொருட்களையும் சிவகுருநாதரால் உண்டான புற்றின் அருகில் வைத்து புற்றுக்கு பூஜை செய்து அதிலிருந்து எடுத்த மண்ணும், பச்சிலையும், விபூதியும் கொடுத்து தன்னை நாடி வந்த மக்களுக்கு குறை தீர்த்தார். இவரின் வழிவந்த பரமசிவன் அடிகளார் இப்போது ஸ்ரீ புற்றுமுருகன் சித்தர் பீடத்தில் அமர்ந்து அருள்வாக்கு கொடுத்து அருள் ஆட்சி செய்கிறார்.

இவர் நான்காவது தலைமுறை. ஐந்தாவது தலைமுறை இவரது மகன் சாலிகுளநாதன்.

அடிகளார் அவர்கள் தமது 25 வது வயதில் சித்தர் பீடத்தில் அமர்ந்து அருள் வாக்கு கொடுத்தார். 1978ல் முருகனின் கட்டளைப்படி வெட்டவெளியில் 12 மணி நேரம் உணவு ஏதும் அருந்தாமல் தவம் இருந்தார். தை மாதம் கடைசி வியாழன் இரவு 12 மணிக்கு தவத்திலிருந்து எழுந்து அருள் ஆசி வழங்கினார். அடுத்த ஆண்டு பூமிக்கு அடியிலிருந்து தவம் செய்ய உத்தரவு கிடைக்க ஐந்து ஆண்டுகள் தை மாதம் கடைசி வெள்ளி என்று 12 மணி நேரம் தவம் இருந்து அருள் பெற்று பக்தர்கள் துயர் நீக்கினார். தற்போது 16 ஆண்டுகள் முருகன் அருளால் 37 மணி நேரம் தவம் செய்துள்ளார். ஆகஸ்ட் 1989 ஆம் ஆண்டு இல்லறத்தைத் துறந்து தனி பர்ணசாலை அமைத்து அதில் அமர்ந்து இறைவழிபாடு செய்து புற்றுக்கு நைவேத்தியமான சாதத்தை மட்டும் புசிக்கிறார். ஞாயிறு அன்று பிற்பகல் 1 மணி அளவில் சித்தர் பீடத்தில் அமர்ந்து அருள்வாக்கின் மூலம் பக்தர்களின் பிணியையும், வறுமையையும் நீக்கி சௌபாக்கியத்தை கொடுக்கிறார்.

இத்திருத்தலத்தின் தலவிருட்சம் வேல மரம் ஆகும். சிவகுருநாதர் தவம் செய்த இடத்தில் உருவானதே இந்த வேலமரம். இங்குதான் சித்தருக்கு சிவபெருமானும், அன்னை பார்வதியும் சிவசக்தி சொரூபமாக காட்சி காட்சி கொடுத்தனர். அடிகளாருக்கு அருள் காட்சி கிடைத்ததும் இங்கேதான். இந்த தல விருட்சத்தின் அடியில் அமர்ந்து தியானம் செய்தால் நினைத்த காரியம் நடக்கும். இது கண்ணால் கண்ட உண்மை. என்னே இறைவனின் திருவிளையாடல்!

சாலிகுளம் சித்தர் பீடத்தின் நுழைவு வாயிலில் அமர்ந்து புன்னகை பூக்க ஸ்ரீ உச்சிஷ்ட விநாயகர் என்னும் திருநாமத்துடன் விநாயகப் பெருமான் அருள் ஆட்சி செய்கிறார். இங்கு இருந்து தான் விழா காலங்களில் பக்தர்கள் பால்குடம், காவடிகள் எடுத்து சித்தர் பீடத்தை வலம் வந்து அருள் பெறுகிறார்கள்.

மூலவர்

குன்று தோறும் நின்றாடும் முருகன், இங்கு புற்றினிலே எழுந்தருளியாதல் இத்தலம் ஸ்ரீ புற்று முருகன் சித்தர் பீடம் என்று பெயர் பெற்றது. புற்று தான் இங்கு மூலவர் ஆவார். சிவகுருநாதர் எனும் சித்தர் இங்கு வந்து பல ஆண்டுகள் தவம் செய்து அடங்கிய இடத்திலே தோன்றியது தான் இந்தப்புற்று. மற்ற சாதாரண புற்றுக்கும் மூலவராக வணங்கப்படும் புற்றுக்கும் அதிகமான வித்தியாசங்கள் உண்டு. மூலவரான புற்றுக்குள் சிவலிங்கம் உருவாகி வருவதாகவும், இன்னும் சில ஆண்டுகளில் சுயம்புலிங்கமாக வெளிப்படும் எனவும் அருள்வாக்கில் கூறப்பட்டு இருக்கிறது. அந்த நல்ல நாளுக்காக பக்தக்கோடிகள் தவம் கிடக்கிறார்கள். புற்றுக்கு சிறப்பு வழிபாடுகளும், தினசரி பூஜைகளும், ஒவ்வொரு ஞாயிறு பகல் 12 மணிக்கு பூஜைகள், கூட்டு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றது. பௌர்ணமி அன்று நடைபெறும் சிறப்பு வழிபாடு முக்கியத்துவம் வாய்ந்தது.

ஸ்ரீ புற்று முருகன்

சாலி குளத்தின் பிரதான மூர்த்தியாக முருகப்பெருமானே விளங்குகிறார். “புற்றிருக்க பிணி இல்லை” என்ற புது மொழியுடன் பக்தர்களின் பிணி தீர்க்கவும் சித்தர் சிவகுருநாதருக்கு சாப விமோசனம் கொடுக்க புற்றிலே காட்சி கொடுத்ததால் ஸ்ரீ புற்று முருகன் என்ற திருநாமத்துடன் இங்கு அருளாட்சி செய்கிறார்

தன்னை நம்பிய முத்துச்சாமி பக்தரின் வயிற்று வலியை வயோதிகர் வடிவில் வந்து புற்று மண் கொடுத்து தீர்த்து வைத்ததால் இன்றும் புற்று மண்ணே நோய் தீர்க்கும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. முருகன் அன்று முத்துச்சாமி பக்தருக்கு கொடுத்த ஏடுகள் இன்றும் உள்ளது. முருகனே அருட் சித்தர் அடிகளாருக்கு குருவாக அமர்ந்து உபதேசம் செய்து அருள்வாக்கு கொடுத்து வருகிறார். முருகனின் பெருமைக்கு எல்லை தான் ஏது? முடிவு தான் ஏது?

நாகசுனை தீர்த்தம்

ஸ்ரீ புற்றுமுருகன் சித்தர் பீடத்தில் பக்தர்களின் தாகம் தீர்க்க முருகப்பெருமானே நேரில் வந்து அடையாளம் காட்டிய இடத்தில் உருவானதே இந்த நாகசுனை தீர்த்தம். இது அற்புத சக்தி கொண்டது. இங்குதான் முருக பக்தர் முத்துச்சாமியின் வயிற்று வலியையும் முருகன் குணமாக்கினார். முதலில் ஆசாரி கிணறு என்று அழைக்கப்பட்ட இந்த சுனையில் சர்ப்பம் தோன்றியதால் நாகசுனை என்று ஆனது. இங்கிருந்து தான் அபிஷேகத்திற்கு தீர்த்தம் கொண்டு செல்லப்படுகிறது. இந்த தீர்த்தத்தில் நீராடி ஸ்ரீ புற்றுமுருகனை 21 முறை “ஓம் சிவ நாதா புற்றுமுருகா சர்ப்ப ராஜா போற்றி ஓம்” என்ற மந்திரம் சொல்லி வலம் வந்தால் தீராத பிணியும் மனநோயும் தீரும், மகப்பேறும் கிடைக்கும், நினைத்த காரியம் கைகூடும் அத்தகைய மகிமை பெற்றது தான் இந்த நாகசுனை.

பெரியம்மா முத்து நாகேஸ்வரி

ஸ்ரீ புற்று முருகன் சித்தர்பீடத்தில் முருகனுக்கு தாயாய் வந்து அமர்ந்த சக்தி தான் முத்து நாகேஸ்வரி. பெரியம்மா என்று பாசத்துடன் முத்து, நாகம், ஈஸ்வரி என்று மூன்று அதிசயதக்க முகங்களுடன் அன்னை காட்சி தருகிறாள். பிரம்ம சக்தி, விஷ்ணு சக்தி, சிவ சக்தி ஆகிய மூன்று சக்தியாகவும் அன்னையே இருந்து கீழ்திசை நோக்கி சாந்த சொரூபியாய் அருளாட்சி செய்கிறாள். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு சகல வரம் தரும் சகலகலாவல்லியாய் காட்சி தரும் அன்னையை காண கண் கோடி வேண்டும்.

அன்னை சண்டிகா பரமேஸ்வரி

ஸ்ரீ புற்று முருகன் சித்தர் பீடத்தில் சண்டித்தனங்களை வேரறுக்கவும் தீய சக்திகளை அழிக்கவும் காவல் தெய்வமாய் அமர்ந்தவள் தான் அன்னை சண்டிகா பரமேஸ்வரி. தான் அமர விரும்பும் இடத்தை தீப ஒளிச் சுடராய் அடிகளாருக்கு காட்டி ஆலயம் அமைத்து பதினெட்டு கரங்களுடன் சிம்ம வாகனத்தில் வடக்கு நோக்கி அமர்ந்து அருள் பாலிக்கிறாள். இன்றும் ஒவ்வொரு பவுர்ணமியன்றும் சப்த கன்னியர்கள் இங்கு வந்து அம்மனுக்கு பூஜை செய்கின்றனர். பூ மணக்க, பத்தி சாம்பிராணி மணம் வீச ஆலய மணி தானாக ஒலிக்கிறது மற்றும் பக்தர்களின் திருமாங்கல்ய பூஜையை ஏற்று சிவசக்தியாகவும்,ஞானசக்தியாகவும் சித்தர்களின் தலைவியாகவும் மஹா சக்தியாகவும் இருந்து மக்களை அரவனைக்கும் தாயாக இருக்கிறாள். அன்னையின் அருளால் நாகதோஷம், மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம் நீங்கி அருள் பெற்றவர்கள் ஏராளம். அன்னையின் பெருமையை வார்தைகளால் அளவிட முடியாது. அன்னையை நேரில் கண்டாலே அவளின் மகிமை புரிந்துவிடும். இவள் யாரையும் வெறும் கையோடு அனுப்புவதில்லை. தவறு செய்தால் உரிமையோடு தண்டிக்கும் இவளே பக்திக்கும் மனம் இறங்கி அள்ளியும் கொடுக்கிறாள்.

மாதந்தோறும் நடைபெறும் சிறப்பு பூஜைகள்

ஒவ்வொரு தமிழ் மாதமும் கடைசி யிறு அன்று உலக சேமநலத்திற்காக யாக வேள்வி மற்றும் படைப்பு பூஜை.

சித்திரை

வருடப்பிறப்பு,
சித்ரா பௌர்ணமி,
குரு பூஜை

வைகாசி

விசாகம் விசாகம்

ஆனி

கடை ஞாயிறு அடிகளாரின்
அவதாரத் திருநாள்

ஆடி

கடை ஞாயிறு
திருவிளக்கு பூஜை

ஆவணி

பௌர்ணமி பௌ

புரட்டாசி

நவராத்திரி பூஜை நவராதிரி

ஐப்பசி

கந்த சஷ்டிகந்த சஷ்

கார்த்திகை

திருக்கார்த்திகை

மார்கழி

திருப்பள்ளி எழுச்சி பூஜை

தை

தைப் பொங்கல்,
கடை வெள்ளி
சிறப்பு பூஜைகள் பூ

மாசி

மகா சிவராத்திரி

பங்குனி

பங்குனி உத்திரம் பங்குனி

திருவிழாக்கள்

சித்திரை-18

வருடாபிஷேகம் மற்றும் குரு பூஜை

ஆடி கடைசி ஞாயிறு

ஆடிப்பூரத்திருவிழா

தை

கடைசி வெள்ளி சிறப்பு பூஜை

சிறப்பம்சங்கள்

ஆலய படங்கள்

பகிர்வுகள்

25 வருடங்களுக்கு மேலாக நாங்கள் குடும்பத்துடன் இந்த ஆலயதிற்கு வருகிறோம். மேலும் பல அதிசயங்கள் எங்களுக்கு நடந்துள்ளது. குறிப்பாக எனக்கு 7 வயதில் கண்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் அன்னையின் அருள்வாக்கினால் நாங்கள் செய்த வேண்டுதல்களாலும் பிரார்தனைகளாலும் நான் அறுவை சிகிச்சையின்றி பூரண குணமடைந்தேன்.

கணேஷ் குமார் - தூத்துக்குடி

நான் இந்த ஆலயதிற்கு 80’களில் வந்தேன். எனக்கு ஏற்பட்ட தீவிரமான நோய்க்கு மருத்துவர்களால் கொடுக்கப்பட்ட சிகிச்சை பலன் இல்லாமல் போக, இங்கே அன்னை சொன்ன பிரார்தனைகளாலும் பரிபூரண இறை நம்பிக்கையாலும் நான் பரிபூரண குணமடைந்தேன். அன்று முதல் நான் என் வாழ்வை அன்னைக்கே அர்ப்பணித்து விட்டேன்.

ஜெயசெல்வி ஆசிரியை – தூத்துக்குடி

இந்த ஆலயதிற்கு தொண்டு செய்வதில் நானும் என் குடும்பதினரும் இரண்டாம் தலைமுறையினர். இங்கு வந்த பின் எங்கள் வாழ்விலும், தொழிலிலும் ஏற்பட்ட பல சிக்கல்கள், நோய்களில் இருந்து விடுபட்டு இறையருளுடன் வாழ்கிறோம்.

சவுந்தர பாண்டியன்-தூத்துக்குடி

25 வருடங்களுக்கு மேலாக நாங்கள் குடும்பத்துடன் இந்த ஆலயதிற்கு வருகிறோம். மேலும் பல அதிசயங்கள் எங்களுக்கு நடந்துள்ளது. குறிப்பாக எனக்கு 7 வயதில் கண்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் அன்னையின் அருள்வாக்கினால் நாங்கள் செய்த வேண்டுதல்களாலும் பிரார்தனைகளாலும் நான் அறுவை சிகிச்சையின்றி பூரண குணமடைந்தேன்.

கணேஷ் குமார் - தூத்துக்குடி

நான் இந்த ஆலயதிற்கு 80’களில் வந்தேன். எனக்கு ஏற்பட்ட தீவிரமான நோய்க்கு மருத்துவர்களால் கொடுக்கப்பட்ட சிகிச்சை பலன் இல்லாமல் போக, இங்கே அன்னை சொன்ன பிரார்தனைகளாலும் பரிபூரண இறை நம்பிக்கையாலும் நான் பரிபூரண குணமடைந்தேன். அன்று முதல் நான் என் வாழ்வை அன்னைக்கே அர்ப்பணித்து விட்டேன்.

ஜெயசெல்வி ஆசிரியை – தூத்துக்குடி

இந்த ஆலயதிற்கு தொண்டு செய்வதில் நானும் என் குடும்பதினரும் இரண்டாம் தலைமுறையினர். இங்கு வந்த பின் எங்கள் வாழ்விலும், தொழிலிலும் ஏற்பட்ட பல சிக்கல்கள், நோய்களில் இருந்து விடுபட்டு இறையருளுடன் வாழ்கிறோம்.

சவுந்தர பாண்டியன்-தூத்துக்குடி

தொடர்பு

கோவில்பட்டி சாலை, சாலிகுளம், ஓட்டப்பிடாரம், தமிழ்நாடு 628401

+91-9894314026,
+91-9972374078,
+91-461-2366347